
கல்பொரு சிறுநுரை
A poignant poetry collection by Kavimugil (கவிமுகில்) (Discovery Book Palace). It explores the psychology of modern streets, touring cinema halls, and the silent, recurring anxieties of the working class.
₹180
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
தாராபாரதியின்இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான "கவிமுகில்" எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்துவைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் -கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.
சாலைஒன்று பேசுகிறது; "புதிய சாலை" வந்த பிறகு, தான் "பழைய சாலை" ஆகிவிட்டதை! சாலைகளின் உளவியலைப் பதிவு செய்த உலகின் முதல் கவிஞனாக கவிமுகில்தான் இருக்கக்கூடும்.
"மொதஆட்டம்" என்றொரு கவிதை, டூரிங் கொட்டகைகளுக்கு மாலை 7 மணி காட்சிக்குச் செல்வதைஅருமையான கவிதையாகப் புனைந்திருக்கிறார்
கவிஞர்கவிமுகில்.
"கல்பொருசிறுநுரை" உங்களின் நெஞ்ச மேடுகளில் தொடர்ந்து முட்டி மோதும்! அவை உருவாக்குகிற நுரைகள்படர்ந்து பெருகி, உங்களை வான் மேகங்களுக்கிடையே கடத்திச்செல்லும் ஆற்றலுடையவை!

