
கல் சிலம்பம்
A short story collection by N. Sriram (என். ஸ்ரீராம்) (Discovery Book Palace). It captures the essence of rural landscapes, agrarian livelihoods, and the struggles of middle-class families with deep ethnic authenticity.
₹180
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsShort Stories / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
நீர்ப்பரப்புக்கு மேலாக மீன்கொத்தி நீலச்சிறகை விரித்துப் பறந்தது. அக்கரைத் தோப்பு வயலில் தென்னைகள் நெடிதாக வளர்ந்திருந்தன. நட்டாற்று ஆயமரம் பட்டுப்போய்விட்டது. செல்லீயக் கோனார், தோப்பு வயலையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு ஆற்றை ஒட்டி வடக்குமுகமாக நடந்தார். பாதம் பட்டு பனித்திவலைகள் கோரையிலிருந்து தெறித்தன. நல்ல பசி. நேராக நல்லிமடம் போய்ச் சேர்ந்தார். ஊர்க்கவுண்டர் வரவேற்று தன்னை உபசரிக்கும் பிம்பம் எழுந்தபடியே இருந்தது.

