
காரைக்காலம்மையார் பாடல்கள்
காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் உள்ளிட்ட புனிதமான பனுவல்களின் தொகுப்பு. பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள இப்பாடல்கள், சிவபெருமானின் உன்னதத் தாண்டவங்கள், பிறவாமை வேண்டித் துதிக்கும் பக்தி நெறி மற்றும் சைவத் தமிழின் தொன்மையான படிமக் கூறுகளை விரிவாக விளக்குகிறது.
₹70
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSpirituality / Poetry / Classics
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் காரைக்காலம்மையார் என்ற பெண் எழுதிய பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றான. காரைக்காலம்மையார் எழுதியுள்ள ‘மூத்த திருப்பதிகம்’ அளவில் சிறியதெனினும் அழுத்தமான உணர்ச்சிகளின் தொகுப்பாகக் கவித்துவச் செழுமையுடன் தனித்து விளங்குகிறது. அமானுஷ்யமான பேயின் தோற்றம், பேயின் சேட்டைகள், சுடுகாடு, பிணம் எரியும் நெருப்பு, நெருப்பிலாடும் சிவன், சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்டு நடனமாடும் சிவனின் தோற்றப்பொலிவு என விரியும் கவிதை வரிகள், உக்கிரமான மொழியில் அமைந்துள்ளன. பெண்ணுடல் காரணமாகச் சமயவாதிகளால் மறுக்கப்பட்டிருந்த பக்திவெளியில், தனக்கான இடத்தை நிறுவிட காரைக்காலம்மையார் முயன்றுள்ளார்.

