கதையின் தலைப்பை யூகித்துக் கொள்ளுங்கள்

கதையின் தலைப்பை யூகித்துக் கொள்ளுங்கள்

Yet to reviewPublished By: ethir-veliyeedu

Sourced under the standard title *கதையின் தலைப்பை யூகித்துக் கொள்ளுங்கள்* written by modern writer Malcom (மால்கம்) and published by Ethir Veliyeedu. It compiles contemporary short stories that reflect on urban isolation, social absurdities, and the subtle emotional struggles of marginalized individuals in modern society.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsShort Stories / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodReflective
கடைசியில் நாமெல்லோரும் ஒருநாளில் கதைகளாகி விடுவோம் என்று முன்பெங்கோ படித்தபோது, அதெப்படி கதைகளாவோம் என்று யோசித்திருக்கிறேன். இப்படித்தான் கதைகளாவோம் என்று செய்முறை விளக்கம்போல் எழுதிக் காட்டியுள்ளார் மால்கம். புனைவுகளே விடவும் புதிர்த் தன்மைகள் நிறைந்த நடப்புண்மைகளைப் பின் தொடர்வதனால் கிடைக்கும் இந்தக் கதைகள் இதோ இந்த இடத்தில், இந்த நொடியில் நிகழும்போதே எழுதப்பட்டவை போல தெரிகின்றன,. தான் பார்க்கும் / கேட்கும் எதுவொன்றிலும் யாரிடத்திலும் செய்தியைத் தேடுகிற ஓர் ஊடகவியலாளரின் மனம் தனது தொழிற்தேவைக்கு அப்பால் போய் அந்தச் செய்திகளுக்குள் பொதிந்துள்ள கதைகளைக் கண்டடைகிறது. இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஊடகத்துறை சார்ந்தவை. பரபரப்பு, வைரல், டிரெண்டிங், ரேட்டிங் செய்திகளை உருவாக்கும் பெருந் தொழிற்சாலைக்குள் உள்ள மனிதர்களின் மனப்போக்குகள், நடத்தைகள், செயல்பாடுகள், அனுபவங்கள் சார்ந்தவை. இக்கதைகள், நம்மை வந்தடையும் செய்திகளை உருவாக்குகிறவர்களைப் பற்றிய செய்திகள் அல்ல. ஒவ்வாமை, சமரசம், துரோகம், வெற்றிக் களிப்பு, தாழ்வெண்ணம், மனநிலைவு, உழைப்பு, அங்கீகாரம், நிராகரிப்பு, போலித்தனம் ஆகியவற்றின் கூட்டுருக்களாக வரும் இவர்களது கதைக்குள் நாம் நம்மையும் காண நேர்கிறது.