
கவலை (எங்கள் கதை)
அழகியநாயகி அம்மாள் தன் முதுமைக்காலத்தில் எழுதிய சிறந்த தன்வரலாற்று நாவல் (நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை). தன் சொந்தக் கதையாக, ஒரு பெண்ணின் வறுமை, உழைப்பு, குடும்ப ஒடுக்குமுறைகள் மற்றும் கவலைகள் நிறைந்த வாழ்வையும், கல்வியின் மூலம் அவர் கண்டடைந்த விடுதலையையும் எளிய நாட்டார் சொற்களுடன் விளக்குகிறது.
₹630
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsAutobiographical Novel / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
இது ஒரு பெண்ணின் கதை. பெண்களின் வாழ்க்கை குடும்பத்தோடு இறுக்கமாக முடிச்சுப் போட்டு வைத்திருப்பதால் இது ஒரு குடும்பத்தின் கதையாகவும் அமைகிறது. தன்வரலாறு, பெண்ணை மையமாகக் கொண்ட குடும்ப வரலாறு என்றும் இதைக் கருதலாம்.
எழுத்தாளர் பொன்னீலனுக்கும்அவரது தாயார் அழகிய நாயகி அம்மாளுக்கும் இடைய ஒருநாள் நடந்த உரையாடல்தான் இந்த நூலின் வித்து. பொன்னீலன் தந்த கதைப் புத்தகத்தைப் படிக்கும் அவரது அன்னை எங் கதையை இந்தக் கதையைவிட எத்தனையோ மடங்கு பெரிதா எழுதலாமே என்று சொல்கிறால். அதன் விளைவே இந்த அரிய பதிவு.
நாவலைப் போன்ற விறுவிறுப்பும் பன்முகப் பரிமாணங்களும் கொண்ட இந்த நூல் ஒரு காலகட்டத்தின், ஒரு நிலப்பரப்பின், ஒரு பண்பாட்டின், ஒரு மக்கள் கூட்டத்தின் கதைகளைச் சொல்கிறது.
பண்பாட்டு அசைவுகளிலும் திகையறியாத வாழ்க்கைப் பயணங்களிலும் ஆர்வம் கொண்டவர்கள் தவறவிடக் கூடாத படைப்பு இது.

