கெடை காடு

கெடை காடு

Yet to reviewPublished By: discovery-publications

எழுத்தாளர் ஏக்நாத் எழுதிய மேய்ச்சல் சமூகம் சார்ந்த சிறந்த நாவல் (நெடில் வெளியீடு / காவ்யா). மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்புறங்களிலிருந்து கிடை மாடுகளைக் கெடை காடு நோக்கி ஓட்டிச் செல்லும் மனிதர்களின் யதார்த்தமான வாழ்க்கை, அவர்களின் காதல், காமம், மற்றும் மேய்ச்சல் நிலத்தின் ஆச்சரியமான பின்னணிகளை விறுவிறுப்பாக விவரிக்கிறது.

₹170

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNovel / Rural Realism / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டிவைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுற்றவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண் தரையெங்கும் எவனோ ஒருவன் சென்றுவந்த ஒற்றையடிப் பாதை இன்னும் ஆச்சரியம்.