
கிடை
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் (கி.ரா.) எழுதிய மிகச் சிறந்த குறுநாவல் 'கிடை' (காலச்சுவடு பதிப்பகம்). கரிசல் நிலத்து ஆடு மேய்க்கும் இடையர்களின் எளிய வாழ்வியல், பனி மற்றும் வெயிலில் அவர்கள் படும் அவலங்கள், மற்றும் அவர்களின் வாழ்வின் உன்னதத் தரிசனங்களை மிக எளிய பேச்சுவழக்கில் சித்திரிக்கிறது.
₹90
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovella / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுகிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கள் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இறுக்கிக்கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் “கிடை’தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகரம் என்று இப்போதும் எனக்குத் தோன்றுகின்றது. இதில் அவர் காட்டியுள்ள நுட்பம் அலாதியானது.
எம்.ஏ. நுஃமான்

