குருதியில் பூத்த மலர்கள்

குருதியில் பூத்த மலர்கள்

Yet to reviewPublished By: discovery-publications

பீட்டர் ஃப்ரெட்ரிக் மற்றும் பஜன் சிங் எழுதிய ஆய்வு நூல் (டிஸ்கவரி புக் பேலஸ்). இந்திய வரலாற்றிலும் சமகாலத்திலும் நிகழ்ந்த பல்வேறு சமூக-அரசியல் போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விரிவாக ஆராய்கிறது.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEssays / History / Non-fiction
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured
சீக்கியம்என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராகபத்து சீக்கிய குருக்கள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் குறித்தும் இந்நூலின் முதற்பாதியில் நூலாசிரியர்கள் விரிவாகப் பேசுகின்றனர். பிராமணியம் என்னும் அந்நியச் சக்தி முதலில் முகலாயர்களுடனும் பின்னர் ஆங்கிலேயர்களுடனும் கரம் கோத்து இந்தமண்ணின் மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி அடக்கி ஆண்டது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார்கள். அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட சுதந்தர இந்தியாவிலும் பிராமணிய சக்தி வேற்றுமை அடிப்படையிலான சாதிய அமைப்பை தனது ஆத்மாவாகக் கொண்டிருக்கும் இந்துத்துவம் என்கிற ஆயுதத்தின் மூலம் தொடர்ந்து மக்களை எவ்வாறு துன்புறுத்தி வருகிறது என்பதை நுணுக்கமாக மறுபகுதியில் ஆய்வு செய்கிறார்கள். அச்சக்திக்கு எதிராக அன்று குருநானக் தொடங்கிய போராட்டத்தை அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்ற பெருந்தலைவர்கள் தொடர்ந்து வந்ததையும், அதன் மேலாதிக்கம் சமகால தில்லி மற்றும் குஜராத் கலவரங்கள் வரை தொடர்வதையும்,மேலும் பசுவுக்காக மனிதர்களைக் கொல்லும் அளவுக்கான கொடூர வடிவத்தை அடைந்து, அச்சக்தி பேருருக்கொண்டு இன்றும் தொடர்ந்து நாட்டு மக்களிடையே பிரிவினைகளையும் பல்வேறு வகையிலான பாதிப்புகளையும் உண்டாக்குவதை நூலின் இறுதிப் பகுதிகளில் விவரிக்கிறார்கள்.