
மரமொதுங்கிய நிழல்
Sourced under standard title *மரமொதுங்கிய நிழல்* by **Ko. Anbukumar (கொ. அன்புகுமார்)**, published by Discovery Book Palace / CommonFolks in 2022. This is a contemporary collection of poetry capturing quiet moments, natural spaces, and human reflections.
₹160
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் என பல்வேறு
பரிமாணங்களைக்கொண்ட கொ.அன்புகுமார் மயிலாடுதுறைமாவட்டம் முட்டம் என்ற அழகிய கிராமத்தில்பிறந்தவர். கொலம்பஸ்-சசிகலா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்த இவர், மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி. கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார். மாணவர் பருவத்தில் தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரிமாணவர்இதழாக சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ பரிசுபெற்ற ‘இளந்தூது’ என்ற மாணவர் இதழின்ஆசிரியராகவும், ‘நம்ம ஊரு செய்தி’, ‘சிறகுகள்’, ‘யூத்இந்தியா’ போன்றநாகை மாவட்ட அளவிலான பத்திரிகைகளில் பணியாற்றி, சேட்டிலைட் தொலைக்காட்சிகளான ‘சன் செய்தி’ப் பிரிவில் துணையாசிரியர், ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர், ‘தந்தி டி.வி’யின் மூத்த நிகழ்ச்சி இயக்குனர், சிறந்தஆவணப்பட இயக்குனர் என கடந்த 14 ஆண்டுகளாகபல்வேறு வளர்ச்சிப்படிகளை எட்டிப் பிடித்திருக்கிறார். அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும், பல சர்வதேச தமிழ் அமைப்புகளிலும் அங்கம் வகித்து வரும் இவர், அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் ஈடுபாடு கொண்டவர்.

