
மீயறிவு
Sourced under standard title மீயறிவு (translated from Nick Bostrom's Superintelligence by Jaya Chindhiran Masilamani / ஜெயச்சந்திரன் மாசிலாமணி), published by Azhi Pathippagam. This major non-fiction work analyzes the challenges, potential dangers, and human responsibilities of artificial superintelligence.
₹700
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTechnology / Artificial Intelligence / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodCritical
நிச்சயமாகப் படிக்கலாம்... ஏஐ குறித்து நாம் ரொம்பவும்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அது அணுகுண்டுகளைவிட அதிபயங்கரமானது"
ஈலான் மஸ்க்
'இந்த புத்தகத்த்தை நான் மிகவும் பரிந்துரைக்கிறேன் - பில் கேட்ஸ்
நாம் செயற்கை நுண்ணறிவு யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம். மனித குல வரலாற்றில் மிகப்பெரிய ஒரு தொழில்நுட்பப் புரட்சி இதோ நம் கண்முன்பே விரிகிறது. ஏஐ ஒரு புதிய யுகமாக, மதமாக, வாய்ப்பாக, அச்சுறுத்தலாக எழுகிறது. இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளைவிட தீமைகள் குறித்த அச்சம் உலகெங்கும் பரவிவருகின்றன. அந்த அச்சங்கள் பொருளுள்ளவையும்கூட
ஸ்வீடனைச் சேர்ந்த பேராசிரியர் நிக் பாஸ்ட்ரம் ஒரு தத்துவவியலர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நிக், செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) உச்சபட்ச நிலையாக கருதப்படும் மீயறிவு (Superintelligence) எப்படிப்பட்ட நிலையை மனித குலத்துக்கு ஏற்படுத்தக்கூடும் என்கிற பிரச்சினையைப் பற்றி இந்த புகழ்பெற்ற நூலில் விரிவாகப் பேசுகிறார். மனிதர்களின் மூளைத்திறனை விஞ்சும் மீயறிவு சாத்தியமாகாது என்று சொல்லமுடியாது என்று கூறி நமக்கு விழிப்புணர்வூட்டுகிறார். மீயறிவு பல விதங்களில் உருவாகலாம் என்பதைப் பற்றியும் அதன் அபாயங்களைப் பற்றியும் விரிவாக பேசும் நிக். அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றியும் கூறுகிறார். செயற்கை நுண்ணறிவின் தொடக்கக் கட்டத்திலிருக்கும் நமக்கு இந்த நூல் ஒரு முக்கிய வழிகாட்டியாக இருக்கும்.
ஏஐயை அறிவியல் அடிப்படையிலும் தத்துவார்த்த அடிப்படையிலும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். எதிர்வரும் அபாயம் குறித்து முன்னதாக நன்கு அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் அதிர்ந்து போகும் படியாக எந்த அழிவும் வராது என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். நம் கண்முன்பாக விரியும் எதிர்காலத்தின் அடுத்தடுத்த அதிர்ச்சி அலைகளை அறிந்துகொள்ள இந்த நூல் நமக்கு உதவும்.


