
நாற்காலிக்காரர்
நவீன நாடக தந்தை ந.முத்துசாமி எழுதிய புகழ்பெற்ற நாடகம். பாரம்பரியக் கோலி விளையாட்டுக் குழுவிற்கும், சீட்டுக்கட்டுக் குழுவிற்கும் இடையே நாற்காலிக்காக நடக்கும் போட்டியைப் படிமமாகக் கொண்டு, இன்றைய அரசியல் மற்றும் வாக்குப் போடும் சாமான்யர்களின் நிலையை விளக்கும் சிறந்த நாடகம்.
₹100
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPlay / Drama / Modern Classics
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். இவற்றைக் காட்டிலும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விளையாட்டு விளையாடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள்! இந்த விளையாட்டின் விதிகள், போக்குகள், விளைவுகள் என்ன? இந்திய அரசியல் யதார்த்தத்தின் அபத்தம் நாடகக் காட்சிகளினூடே தோற்றம் கொள்கிறது. ஆகிவந்த மதிப்பீடுகளையும் இயல்பாகிவிட்ட சமரசங்களையும் நோக்கிக் கேள்வி எழுப்பும் இந்த நாடகம் அரசியல் அபத்தத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. எழுதிப் பல பதிற்றாண்டுகள் கடந்தாலும் இன்றளவும் பொருத்தப்பாடுடைய நாடகம் இது.

