நாவலும் வாசிப்பும்

நாவலும் வாசிப்பும்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

வரலாற்று அறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ஆய்வு நூல். நாவல் என்ற நவீன புனைவு வடிவம் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்ற கதையையும், அச்சுத் தொழில்நுட்பம் மௌன வாசிப்பு முறையில் ஏற்படுத்திய கலாச்சாரப் புரட்சியையும் வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கிறது.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEssays / History / Literary Criticism
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured
வாசிப்பு என்றதும் ஒருவர் தனியாக அமர்ந்து மௌனமாக வாசிக்கும் காட்சி நம் மனதில் இயல்பாக எழக்கூடும். இத்தகைய வாசிப்புக்கு வயது சற்றேறக்குறைய நூறு ஆண்டுகள் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். வாசிப்பு என்பது பொது இடங்களில் சமூக நிகழ்வாக இருந்த நிலை அடியோடு மாறிவிட்டது. இந்த மாற்றத்தின் பின்னணியில் நவீன தமிழின் வளர்ச்சிப் போக்கு இருக்கிறது. நாவல் என்னும் கலைவடிவம் தமிழுக்கு வந்த விதமும் வளர்ந்த விதமும் இருக்கின்றன. நாவலை ஒரு கலை வடிவமாக அல்லாமல் பண்பாட்டு வரலாற்றின் முக்கியக் கூறாகக் கண்டு அதன் பன்முகப் பரிமாணங்களை ஆழ்ந்து அலசும் நூல் இது. ஆ. இரா. வேங்கடாசலபதி வரலாற்றுக்குரிய துல்லியமும் புனைவுக்குரிய சுவையும் கொண்ட மொழியில் இதை எழுதியிருக்கிறார். நாவல் என்பது பன்முக வாசிப்புக்கு உரியது. நாவல் வாசிப்பும் வரலாறு, சமூகம், பண்பாடு எனப் பன்முக அடையாளம் கொண்டது. அந்த அடையாளங்களைச் சித்திரமாகத் தீட்டுகிறது சலபதியின் எழுத்து.