நனவோடை

நனவோடை

Yet to reviewPublished By: discovery-publications

Published by Discovery Book Palace, "நனவோடை" by N. Sowrirajan is an evocative collection of personal essays, poetry, and creative reflections. The book portrays the deep emotional landscapes, inner meditations, and artistic thoughts of the author.

₹160

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPoetry / Essays
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodReflective
‘எத்தனைகோடிஇன்பம் வைத்தாய் இறைவா...’ மனனம் செய்தபோது தெரியாது பாரதியை. அத்தீயைத் தொட்டவுடன் உணர்ந்துகொண்டேன், மதியா உலகில் மதிப்புடன் இருந்த புரியா பேரிலக்கியம் என்று. கம்பன், வள்ளுவன், இளங்கோவை அறிமுகம் செய்தவன் பாரதி யாமறிந்த மொழிகளிலே சொன்னவன் பாரதி மனதில் உறுதி வேண்டும் சொல்லித்தந்தவன் பாரதி காணி நிலம் வேண்டும்வேண்டச் சொன்னவன் பாரதி நன்றிகள் கோடி உனக்கு. எவ்வளவுசொல்லவேண்டும், உன்னை எனக்குக் கொடுத்த திரு மணி ஐயா அவர்களுக்கு? தேவாரம் அறிமுகம் செய்து, கை கூட்டி அழைத்துச்சென்றுபெருமையுடன் நின்ற நீங்கள் என் துரோணர். முதல் பாடலிலேயே முட்டி நின்ற எனக்கு, கொக்கொக்ககூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்கசீர்த்த இடத்து. என, வள்ளுவனை அறிமுகம் செய்து, இயல்பாய் இருக்கச் செய்த நம் முதல் பயணம்தேனியிலிருந்து சின்னமனூருக்கு... அது பேருந்து பயணம்மட்டுமல்ல, உங்களின் தேடல் நான் எனத் தெரிந்துகொண்டதருணம். உங்களின் நீட்சியாகக் கண்டேன் கடைக்கோடியில் ஓர் தனுஷ்கோடி. இயல்பைமாற்றி கம்பனை என் காதுகளில் தேனாய்ஊற்றிய நாட்கள், நினைவிருக்கும் வரை...