
நட்ராஜ் மகராஜ்
Sourced under standard title *நட்ராஜ் மகராஜ்* (Natraj Maharaj) by **Devibharathi (தேவிபாரதி)**, published by Kalachuvadu. Widely considered one of his finest achievements, this monumental novel explores human psychology, the weight of history on an individual, and contemporary social realities, weaving reality with magical elements.
₹390
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel / Magical Realism / Modern Classics
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு ‘நட்ராஜ் மகராஜ்’ என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துல்லியத்திலும் செழுமையிலும் இந்த நாவல் அவரது படைப்பாற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது. இழை விலகாமல் நெய்ததுபோல நாவலின் எதார்த்தமும் கற்பனையின் மாயமும் பின்னியிருக்கின்றன. (முன்னுரையிலிருந்து)
தேவிபாரதி
தேவிபாரதி (பி. 1957) எண்பதுகளில் சிறுகதைகள் மூலம் அறிமுகமாகித் தொடர்ந்து பல்வேறு தீவிர இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிதுகாலம் செயல்பட்டவர். 1993இல் வெளிவந்த இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘பலி’ பரவலான கவனத்தைப் பெற்றது. 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அக்காதெமியின் பரிசுபெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2014இல் காலச்சுவடு வெளியிட்ட ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாண ராமன் மொழிபெயர்ப்பில் Harper Collins Publications வெளியீடாக ‘Farewell Mahatma’ என்னும் தலைப்பில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள புதுவெங்கரை யாம்பாளையம் என்னும் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்ட தேவிபாரதி தமிழக அரசுக் கல்வித்துறையில் பணியாற்றி 2006இல் விருப்ப ஓய்வுபெற்றார். காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் ஓராண்டு பணியாற்றினார். தற்போது நூலகராகப் பணியாற்றும் மனைவி ரத்தினாம்பாளுடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வசித்துவருகிறார்.

