
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
Sourced under standard title ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (Oru Maalayum Innoru Maalayum) by poet Salma (சல்மா), published by Kalachuvadu Publications. This celebrated debut poetry collection presents highly intimate, bold, and sensitive poems exploring loneliness, gender confinement, and feminine identity within traditional social spaces.
₹110
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
சல்மாவின் கவிதை மொழி தீவிரமான பேசுபொருளும் கலை நேர்த்தியும் கொண்டது. தீவிரமான விஷயங்களை நுண்ணுணர்வுடனும் நேர்த்தியாகவும் இவரது கவிதைகள் கையாள்கின்றன.
ஒரு பெண் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகள் உளவியல், உடல், வாழ்வியல் எனப் பல வகைகளிலும் பரவியிருக்கின்றன. இவற்றின் வலியையும் அதிலிருந்து மீண்டு எழுவதற்கான வேட்கையையும் வீரிய மிக்க கவிதைகளாக மாற்றுகிறார் சல்மா.
பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றிலும் இயக்கம் கொள்ளும் வாழ்வின் பல்வேறு கூறுகளின் மீதும் சல்மாவின் கவிமனம் கவனம் செலுத்துகிறது.
நவீன தமிழில் பெண்ணெழுத்து எழுச்சி பெற்ற காலகட்டத்தில் முதன்மையாக வெளிப்பட்ட கவிஞர்களில் ஒருவர் சல்மா. சுயத்தை அறிதலும் விடுதலை வேட்கையுமே இவரது கவிதைகளின் அடிநாதம்.

