சலனமின்றி மிதக்கும் இறகு

சலனமின்றி மிதக்கும் இறகு

Yet to reviewPublished By: discovery-publications

Sourced under the standard title 'சலனமின்றி மிதக்கும் இறகு', written by Priya Baskaran (பிரியா பாஸ்கரன்). This collection of contemporary poems explores human freedom, boundaries, and personal liberation using the evocative metaphor of a bird's song and flight.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
"கூண்டுப்பறவைகள் ஏன் பாடுகின்றன?" என்று கேட்டார்ஆப்ரோ அமெரிக்கக் கவிஞர் மாயா ஆஞ்சலோ. பறவைகளிடம்பாடுவதற்கு என்று இதுவரை பாடப்படாத ஒரு பாடல் இருக்கிறது. அதை அப்பறவை வானில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும் பாடத் தவறுவதே இல்லை கவிஞர்பிரியா பாஸ்கரன்கூட இப்படிப்பட்ட ஓர் அபூர்வப் பறவையாகத்தான்எனக்குத் தென்படுகிறார். பழந்தமிழிலக்கியப் பயிற்சியுடன் வெண்பா போன்ற பாவினங்களின் மீது அக்கறை கொண்டபிரியா பாஸ்கரன் போன்றவர்கள் தமிழ்க் கவிதையில் நவீன வெளிப்பாட்டை நோக்கிநகர்கையில் தமிழ் புதிய தோலுரிப்புக்கு ஆளாகிறது. தமிழ்க்கவிதைப் பிரதேசத்தில் புதிய பூகோளம் ஒன்று உள்நுழைகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகைநிலங்கள் சார்ந்த தமிழின் திணைக் கோட்பாடு ஒரு புதிய உடைப்புக்குஆளாகிறது. ஓக் மர நிழலும், மேப்பிள் மர எழிலும், இருட்டில்பால்போல் ஒளிரும் வெள்ளிப் பனியுமாய் கண்ணில் விரியும் புதிய நிலக்காட்சிகள் பிரியா பாஸ்கரன் கவிதைகளைச் சர்வதேசத்தன்மை கொண்டவையாக்குகின்றன. பனியும் பனி சார்ந்த தமிழ்வாழ்க்கைக்குமான ஆறாம் திணை ஒன்று மொட்டவிழ்த்துமெல்ல மலரத் தொடங்குகிறது. இந்திரன்கலை இலக்கிய விமர்சகர்