
சேவல்களம்
Sourced under the standard title 'சேவல்களம்', written by Balakumar Vijayaraman and published by Kalachuvadu Publications (2019), this realistic novel focuses on the traditional Tamil rooster-fighting game (sevalkattu) in Madurai, reflecting rural community dynamics, honor, and friendships.
₹225
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான பேச்சுமொழியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்விளையாட்டு ஒருபுறமும் விளையாட்டுக்கு நிகரான சுவாரசியம் கொண்ட வாழ்க்கை நிகழ்வுகள் ஒருபுறமுமாக இணைகோட்டில் இந்நாவல் செல்கிறது. நாவல் பாத்திரங்கள் பெரும்பான்மையும் ‘நல்லவர்’களாகவும் குணவான்களாகவும் இருப்பது இன்றைய சூழலில் பெருத்த ஆசுவாசத்தைத் தருகிறது.
பாலகுமார் விஜயராமன்
பாலகுமார் விஜயராமன் (பி. 1980) மதுரையைச் சேர்ந்தவர், ஓசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்புப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் - தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது சிறுகதைத் தொகுப்பு: ‘புறாக்காரர் வீடு’, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் ‘அஞ்சல் நிலையம்’, ஆலன் கின்ஸ்பெர்க்கின் ‘ஹௌல் மற்றும் சில கவிதைகள்’, சூழலியல் சார்ந்த ‘கடவுளின் பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகிய மொழியாக்கப் படைப்புகளையும் வெளியிட்டுள்ளார். ‘சேவல்களம்’ இவரது முதல் நாவல். பாலகுமார், தனது ‘தென்திசை’ (thendhisai.blogspot.in) வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

