
சிந்திக்கும் வாயில்
Sourced under the standard title *சிந்திக்கும் வாயில் - இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர்*, written by prominent scholar Stalin Rajangam (**ஸ்டாலின் ராஜாங்கம்**) and published by Neelam Pathippagam. This research-based essay collection explores contemporary discourse and critical evaluations of pioneering intellectual and social reformer Iyothee Thass.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodCritical
ஒரு சிந்தனையாளரின் முக்கியத்துவம் அவர் பெயரை எல்லா இடத்திலும் பொறித்துச் செல்வதில் இருப்பதில்லை. மாறாக, பெயரே மாறிவிட்டாலும் சிந்தனையின் தடத்தை ஏதோவொரு வடிவத்தில் கைமாற்றித் தந்து செல்வதில்தான் அவரின் முக்கியத்துவம் இருக்கிறது. ஞானிகளும் சித்தர்களும் இவ்வாறு இருந்துவிட்டுதான் சென்றிருக்கிறார்கள். அயோத்திதாசர் எழுதிய தலைப்பிலேயே ஒருவர் எழுதினாலும் அவர் தந்திருக்கும் தகவல்களை விடுத்து வேறு தகவல்களைக் கையாண்டிருக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. ஆனால், அவரின் சிந்தனைச் சட்டகத்தை இவ்வகை கட்டுரைகள் கையாண்டிருக்கின்றன. அவரின் தகவல்களிலிருந்து விலகியிருப்பினும் அவரின் சிந்தனை முறை அக்கட்டுரை விவாதிக்க எடுத்துக்கொண்ட தலைப்புக்குப் புதிய கோணத்தைத் தந்திருப்பதைப் பார்க்க முடிகிறது

