
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
Written by the legendary author Sundara Ramasamy (சுந்தர ராமசாமி), published by Kalachuvadu Publications. Sourced under the title *சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு*, this massive book compiles his complete short stories capturing human emotions, existential search, and social realities with sharp aesthetic precision.
₹975
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsShort Stories
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
சிறுகதைகளில் அழுத்தமான தடம் பதித்த முன்னோடிகளில் ஒருவர் சுந்தர ராமசாமி. சிறுகதை என்னும் நவீன கலை வடிவத்தை ஆழமாக உள்வாங்கிய அவர் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கலையம்சத்திலும் சிறந்த பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.
ஏற்கெனவே செய்த சாதனைகளைத் திரும்பச் செய்வதில் விருப்பமின்றிப் புதிய சவால்களைத் தெடிச் செல்லும் முனைப்புக் கொண்ட சு.ரா., சிறுகதைகளின் பேசுபொருள்கள், வடிவம், மொழிநடை முதலானவற்றில் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டார். இதன் விளைவாக பல்வேறு வகைமைகளில் முனுதாரணமாகக் காட்டக்கூடிய பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.
நேர்த்தி, அழகுணர்ச்சி, தீவிரம், நட்பம் ஆகியவை கூடிய மொழிநடை, புதிய பொருண்மைகளையும் வடிவங்களையும் நாடிச் செல்லும் வேட்கை, கலாபூர்வமான அமைதியும் ஆழமும் இணைந்த படைப்பாற்றல் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சிறுகதைகள் இவை.
புதிதினும் புதிது கேள் என்னும் கொள்கையுடன் தன் கலைப் பயணத்தை மேற்கொண்ட ஒரு கலைஞரின் காலடித் தடங்களைத் துல்லியமாக அடையாளம் காட்டும் தொகுப்பு இது.

