
தீக்குளித்துப் பிழைத்த தேகம்
This is an evocative contemporary collection of Tamil poems written by Mu. Ve. (Mu. Venkatesan), exploring deep personal reflections, emotional imagery, and human experiences.
₹130
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
பெருந்தொற்றுக் காலத்தில் நாம் கற்றுக்கொண் பாடங்கள், நம்மைப் புதிய வாழ்வியல் நெறிமுறையை நோக்கி நகர்த்துகின்றது. வழியெங்கும் அடக்கம் செய்ய இயலாமல் துணியால் போர்த்தப்பட்டுக் கிடக்கும் காட்சி, தனியார் மயமாகிவிட்ட மருத்துவம், சிறு குறு தொழில்கள் முடங்கிய நிகழ்வு போன்றவற்றை தனது எளிய நடையில் இந்த நூலில் கவிதையாக வடித்துள்ளார்.
வேந்தர் கோ.விசுவநாதன் வி.ஐ.டி. - வேலூர்
சில சமயம் புதுக்கவிதைகளைப் பிடிக்க முயல்கிறார். சில சமயம் புதுக்கவிதையிலிருந்து நவீனக் கவிதையின் கிளையைத் தாவிப் பிடிக்க முயல்கிறார். வட்டார மொழியில் கவிதை செய்ய முயலும்போது கூடுதலாக உயிர்ப்போடிருக்கிறார் மு.வெ.
வெய்யில்,
இதழாசிரியர் ஜூனியர் விகடன்
ஊரடங்கு காலத்தில் நான் அனுபவித்த நிகழ்வுகளை, செய்தித்தாள் வாசிப்பின் மூலம் அறிந்த செய்திகளை, செவிவழி கேட்டு உணர்ந்த வலிகளை என் கவிதை மொழியில் உங்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியே இக்கவிதைத் தொகுப்பு 'தீக்குளித்துப் பிழைத்த தேகம்'. இக்கவிதைகளை வாசிக்கும் நிகழ்கால தலைமுறை யினருக்கு தாங்கள் உயிரோடு உலாவி வருவதை எண்ணி பெருமூச்சு விடவும், வருங்கால தலைமுறைக்கு வரலாற்று செய்தியாகவும் அமையும் என்பது என் நம்பிக்கை.
மு.வெ

