
தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு
https://www.commonfolks.in/books/d/thinam-ovvondrum-perunganavu
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
எமதுபண்பாட்டுச் சூழலில், தனது நோயைப் பற்றிவெளிப்படையாகப் பேசுவதும் அதைப் பற்றிப் பதிவிடுவதும் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. அதற்குரிய உறுதி எவருக்கும் இருப்பதில்லை. அவரவர் தமக்குள்ளும் தாம் சார்ந்த சூழலுக்குள்ளும்தம்மைக் குறுக்கிக்கொண்டு, மன உளைச்சல்களுடன் நாட்களைக்கழிப்பதே வழமை. புலம்பெயர்ந்த சூழலில் உயிரைப் பறிக்கக்கூடிய கொடிய நோயின் ஒவ்வொரு நொடியையும் எதிர்கொண்டு முழுமையாக மீண்ட ஒருவரின் சுயசரிதம் இது. வாழ்வு, எதிர்பார்ப்பு நிறைந்தது. சிலநிகழ்வுகள் ஒரு கணத்தில் அந்தவாழ்வைத் தலைகீழாக மாற்றிவிடலாம் என்ற யதார்த்தத்தை இந்நூல்தெளியவைக்கிறது. உறவுகளின், நண்பர்களின் அருகாமையும் அவர்களின் வெளிப்படைத் தன்மையும் எவ்வளவுமுக்கியமென்பதை உறுதிப்படுத்துகிறது இந்நூல். விஜியின் இயல்பான மனஉறுதியும நேர்மறையான அணுகுமுறையும், நோய்க் காலத்தின் வாழ்க்கைச் சம்பவங்களும், உள்ளப் பிரதிபலிப்புகளும் பலருக்கும் ஒரு முன்னுதாரணம். மற்றவரும்பயன்பெறட்டும் என்பதற்காகவே விஜியால் எழுதப்பட்டிருக்கும் ’தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு’ அரிய, தேவையான, உணர்வுபூர்வமான ஒரு நூல்!
தயாளன்வேலாயுதபிள்ளை
பேராசிரியர்
மேற்குப்பல்கலைக்கழகம்
நோர்வே

