
தோற்றுப்போனவர்களின் பாடல்
https://www.udumalai.com/thotturu-ponavargalin-padal.htm
₹70
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTranslation Science
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
ோற்றுப்போனவர்களின் பாடல்
வ.ஐ.ச ஜெயபாலன் அவர்கள் எழுதியது.
உலக இனமரபில் தமிழின அழித்தொகுப்பின் உச்சபட்ச நாட்களில் ஜனித்த இக்கவிதைகள் அதே நத்த வாடையோடும் நிண வீச்சத்தோடும்.ஆனாலும் முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்ற நம் பாட்டன் குடவாயிற் கீரத்தனாரின் வரிகள் நிழலாடுகின்றன நினைவில். மொழியில் திளைத்து மண்ணில் வேரோடி, ஜரிமைக்கனவுகளில் ஸஞ்சரித்த கவிஞனை போர்க்கழுகு கொத்திக்கொத்திப் பிய்த்தெறிந்து துரத்துகிறது. நாடோடியாய் அவன் திரியும் வழியெங்கும் வெடிமருந்தின் நெடி. யுத்தகாலங்களுக்குள் வாழ்ந்த தமிழ்ப்புலவன் அரற்றும் கண்ணீர் அறத்தீயாய் எரிக்கிறது. இசைமை கலந்த அவன் கவிதைகளிலிருந்து பீறிட்டெழுகின்றன. முகாரியும் சுப்பந்துவராளியும். வெடி சத்தங்களுக்கிடையேயும் முகிழ்க்கின்றன. வாத்சல்யம் ததும்புமு் நேசங்கள் . கோபத்தில் அவன் நம்மீது துப்பும் எச்சிலைத் துடைத்துக் கொள்வதுதவிர , பதிலேதும் இல்லை நம்மிடம். ஸ்தூலமாய் உலவுகிறதுதாயின் பேரன்பும் அழுமையும் தாலாட்டின் சாரமும். அவனின் எல்லா துயரங்களுக்கு மத்தியிலும் கருக்கொண்ட மேகங்களின் கீழிருந்து துளிர்க்கிறது ஒரு தளிர்.

