உப்பு

உப்பு

Yet to reviewPublished By: discovery-publications

-

₹110

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
என் இடது கையில் நாணயத்தை வைத்தேன் அதன் மேல் ஊதினேன் வலது கையால் அதை மூடிவிட்டு அவளிடம் கூறினேன்: ‘பக்பூக்’என்று சொல் அவளும் ‘பக்பூக்’ என்றாள் கைகளைத் திறந்தேன் எங்கே நாணயம்? எங்கே? கண் சிமிட்டும் நேரத்தில் நாணயம் மாயமாய் மறைந்துவிட்டதே! அவள் சிரித்தாள் அவளது கண்களில் அவ்வளவு ஆனந்தம்! இறைவன் அவளைப் பாதுகாப்பானாக- அவளுக்கு இன்னும் இரண்டு வயதுகூட ஆகவில்லை ‘பக்பூக்’ நாணயம் காணாமல் போய்விட்டது வெல்வெட் ஆடை அணிவிக்கப்பட்ட அவளது பெரிய பொம்மையை எடுத்துவரச் சென்றாள் அதை என் கையில் வைத்து ‘பக்பூக்’ என்றாள் நான் கரகரத்தக் குரலில் சொன்னேன்: என் உயிரின் உயிரே! இந்த பொம்மை மாயமாய் மறைந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! (பேத்தி ஹனூஃபிற்கு..)