
உயிர்த்தேன்
Originally serialized in 1966, this novel focuses on rural reconstruction, agrarian social harmony, and female leadership.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsFiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
தி. ஜானகிராமனின் படைப்புகளில் பெண் கதாபாத்திரங்கள் முதன்மை பெறுவது வழக்கம். இந்த நாவலும் அப்படித்தான். அனுசூயா, செங்கம்மா ஆகிய இரு பெண்களைச் சுற்றிச் சுழலும் இந்தப் புனைகளம் பெண்களின் நிலையை அழுத்தமாகச் சொல்கிறது.
அனுசூயா, செங்கம்மா ஆகிய இருவரும் பெண்ணியல்பின் இரு வேறு நிலைகளைப் பிரதிபலிக்கிறார்கள். அனுசூயா வெளிப்படையானவள். மானுட நேயம் என்னும் பொதுப் புள்ளியில் இருவரும் ஒன்றிணைகிறார்கள். இவர்களுடைய உலகில் ஆண்களுக்கான இடம் என்ன என்பது ஆவலைத் தூண்டும் பரிமாணமாக நாவலில் வெளிப்படுகிறது.
விவரிப்பின் நுட்பங்களும் உளவியல் சூட்சுமங்களும் சுவாரஸ்யமான கதையோட்டமும் கொண்ட நாவல் இது.

