
வசை மண்
A Tamil translation of Máirtín Ó Cadhain's classic Irish modernist novel *Cré na Cille* (Churchyard Clay / வசை மண்), translated by R. Sivakumar. Set entirely in a cemetery, it presents a highly satirical, poetic dialogue among the dead continuing their earthly rivalries.
₹390
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTranslated Novel / Classics
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodSatirical
அயர்லாந்து எழுத்தாளரான மார்ட்டீன் ஓ' கைனின் 'வசை மண்' நாவல் நவீன ஐரிஷ் இலக்கியத்தின் பெரும் 'கிளாசிக்'காகக் 'காகக் கருதப்படுகிறது. மூலமொழியில் 1949இல் வெளியான இந்நாவல் பெரும் இலக்கியச் சாதனை என்ற புகழையும் அராஜகப் பிரதி என்ற நெருங்க முடியாத தன்மையையும் ஒரே சமயத்தில் பெற்றது. எனினும் ஐரிஷ் தவிர்த்த வேறு மொழி வாசகர்களுக்கு ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக் காலம் இந்தப் படைப்பும் படைப்பாளியும் அறியப்படாதவர்களாகவே இருந்தார்கள். 2015, 2016ஆம் ஆண்டுகளில் வெளியான இரண்டு ஆங்கில மொழியாக்கங்களே மார்ட்டீன் ஓ`கைனை உலகின் முக்கியமான உலகின் முக்கியமான நாவலாசிரியர்கள் வரிசையில் அமர்த்தின. ஜானதன் ஸ்விஃப்ட், ஆஸ்கர் வைல்ட், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஆகியோரின் ஐரிஷ் அங்கத மரபிலும் வில்லியம் பட்லர் யேட்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவல் பெக்கெட் ஆகியோரின் ஐரிஷ் இலக்கிய மேதைமை வரிசையிலும் இந்நாவல்மூலம் மார்ட்டீன் ஓ' கைன் இயல்பாகப் பொருந்துகிறார்.

