
வெக்கையை விரும்பும் வலசை
A modern poetry collection featuring emotional, visual, and poignant verses exploring solitude and urban experiences.
₹140
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
தளும்பத்தளும்பப் போதாமைகளால் நிரம்பிய அவன் வாழ்வு தொடர்ந்துஅவனை அலைகழித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதும் ஏதோவொன்றில் அல்லது ஏதோவொன்றால் அவன் நிறைவைக் கண்டடைகிறான். பகிர யாருமற்றத் துயரங்கள் அல்ல சந்தோஷங்களே, பங்கெடுத்துக்கொள்ளஆட்களற்றத் தோல்விகள் அல்ல வெற்றிகளே அவனைஅதிகம் துன்புறுத்துகிறது. அணு சோதனையின் போதுஉண்டாகும் பெருங்குழியைப் போல கதிர்வீச்சுடன் கூடியஒரு மாபெரும் வெற்றிடம் அவனுக்குள் நிரந்தரமாய் உண்டாகிவிடுகிறது. சொற்களால் சுற்றிவலைக்கப்படும் ஏதோவோர் கணம் அவனை முன்னோக்கிஉந்திக்கொண்டேயிருக்கிறது. அதனால் அவன் எழுதுகிறான்; ஓயாமல்எழுதுகிறான்; தொடர்ந்து எழுதுகிறான்; தாய் மடியில் பாதுகாப்புடன்விளையாடும் குழந்தையென மொழியின் மடியில் சொற்களோடு விளையாடியபடியே அவன் எழுதுகிறான். அப்படிஒருவனால் எழுதப்பட்டதுதான் இத்தொகுதி.
நிறைநேசங்களுடன்,
வழிப்போக்கன்

