
வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
A Tamil translation of Jack Canfield's motivational classic 'The Success Principles'. It presents twenty-five key principles and strategies designed to help readers achieve success and build a fulfilling life.
₹599
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSelf-Help / Motivational / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodUplifting
ஜாக் கேன்ஃபீல்டு, வாழ்வில் அதிகமானவற்றைப் பெற மிகவும் துடிப்போடு இருப்பவர்களுக்கு, அவற்றை அடைவதற்குத் தேவையான அறிவையும். உள்நோக்குகளையும், புரிதலையும், உத்வேகத்தையும் கொடுக்கின்ற, தனது களத்தில் தலைசிறந்து விளங்குகின்ற ஒரு மேதை. வாழ்க்கையை வெற்றி கொள்ள அர்ப்பணிப்புடன் இருக்கும் எவரொருவருக்கும் இப்புத்தகம் ஒரு மிகச் சிறந்த பரிசு."
மைக்கேல் ஜெர்பர், உலகப் புகழ்பெற்ற 'சிறுதொழில் அதிபர்களின் குரு'
பல்வேறு துறைகளைச் சார்ந்த மாபெரும் சாதனையாளர்கள் வெற்றிகரமாக உபயோகித்துள்ள வெற்றிக் கொள்கைகளைத் தொகுத்து, சாதாரணமானவர்களும் அவற்றை எளிதாகப் பின்பற்றி வாழ்க்கையில் பெருவெற்றி பெறுவது எப்படி என்பதை ஜாக் கேன்ஃபீல்டு இப்புத்தகத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
இதைப் படித்து முடித்தக் கையோடு, இதில் கூறப்பட்டுள்ள தெளிவான, எளிய, நடைமுறைக்கு உகந்த வெற்றிக் கொள்கைகளைப் பயன்படுத்தி உங்கள் இலக்கை அடைய நீங்கள் துடிப்போடு துள்ளி எழுவீர்கள் என்பது உறுதி.
ஒரு பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கி, இன்று பலநூறு கோடி சொத்துக்களுக்குச் சொந்தக்காரராகவும், உலகம் போற்றும் ஒரு பேச்சாளராகவும், சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்ற ஒரு நூலாசிரியராகவும் விளங்கும் ஜாக் கேன்ஃபீல்டைவிட, வெற்றி குறித்துப் பேச வேறு ஒரு பொருத்தமான நபர் இருக்க முடியாது. அவர் கடந்த 30 வருடங்களாக உலகெங்கிலும் தான் நடத்தி வரும் பயிலரங்குகள் மூலமாக 5,00,000க்கும் அதிகமான தொழிலதிபர்கள், பெருநிறுவனத் தலைவர்கள், மேலாளர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், நிறுவன ஊழியர்கள், கல்வியாளர்கள் மற்றும் தனிநபர்கள் போன்றோர் தங்களுடைய ஆத்மார்த்தமான கனவுகளை நனவாக்க வழிகாட்டியுள்ளார். உலகின் மிகச் சிறந்த புத்தக வரிசைகளில் ஒன்றாகத் திகழும் 'சிக்கன் சூப் ஃபார் த ஸோல்' புத்தக வரிசையை அவர் மார்க் விக்டர் ஹான்சனுடன் சேர்ந்து 1993ம் ஆண்டு தோற்றுவித்தார். இதுவரை 'சிக்கன் சூப்' புத்தகங்கள் 46 மொழிகளில் 12 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளன.

