
மூங்கில் மூச்சு
An electrifying narrative detailing the lives of a proud warrior clan that was systematically marginalized and branded as criminals by the British administration, exploring their fierce resistance.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistory, Sociology
- PlacesMadurai region
- Time PeriodPre-Independence
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodIntense and Epic
மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்த பிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங்காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்பு மிக்க ஓவியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா?
வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக, கோயில் பிராகாரத்தின் கற்பாளங்களில், ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகாவால் முடிந்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி.
- வண்ணதாசன்

