மருத்துவத்தில் மாற்றுக் கருத்துக்கள்

மருத்துவத்தில் மாற்றுக் கருத்துக்கள்

Yet to reviewPublished By: discovery-publications

A collection of engaging historical tidbits, rare photographs, and anecdotes that bring the vintage charm of old Tamil Nadu back to life.

₹160

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsCultural History
  • PlacesMadras / Tamil Nadu
  • Time Period1920s - 1970s
  • Ideal ForAdults, Seniors
  • Age RangeAdults, Seniors
  • Reading LevelBeginner
  • MoodWarm and Informative
மருத்துவம்இன்று பகல் கொள்ளையாக உருவெடுத்திருக்கிறது. அதிலும் கார்ப்பரேட் என்ற பெரும் தொழிலாகமாறிய பிறகு அன்பு, கருணை, ஈவு, இரக்கம் என்றபண்புகளைத் தொலைத்துவிட்ட கொடூரமாக மருத்துவம் மாறிவிட்டது. மருந்து உற்பத்தியாளர்களும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அரசும்கூட இன்றைய மருத்துவத்தால் மக்கள் படும் அவலத்தை மதிப்பவர் களாய்இல்லை. ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற கூற்றுப் போல ‘மருத்துவரே தெய்வம் மருந்துகளே பிரசாதம்’ என்ற மனநிலைக்கு மக்கள்வந்துவிட்டார்கள். இந்தச் சூழலில் நம்முடைய சிந்தனைக்கும் நல்வாழ்வுக்கும் ஒரு கருணை மழைபோல டாக்டர் அலீம் இந்த அரிய நூலைப்படைத்திருக்கிறார். & பத்மஸ்ரீசிற்பி பாலசுப்பிரமணியன். தன்னிடம்மருத்துவத்துக்காக வருபவர்களுடன் மருத்துவர் அலீம் அவர்கள் நடத்தும் உரையாடல்முறை புகழ்பெற்றது. மருத்துவத்துக்காக அவரை நாடி வரும்மக்களுக்குத் தெளிவும் நம்பிக்கையும் அளிக்கும் ஓர் அமைதியான நீரோடைபோன்றது. அதேபோல் இந்த நூலிலும் ஒவ்வொருவர்மீதும் அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நண்பரின் அறிவுரைபோல அவரது எழுத்து அமைந்திருக்கிறது. நாம் எப்போதோ படித்தசிறுவர் கதைகளில் இருந்து பெரியவர்களுக்கான வாழ்க்கைக்கான பாடங்களைச் சொல்வது மருத்துவர் அலீம் அவர்களின் உத்தி. அந்த உத்தியை இந்தநூலில் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இந்த நூலைப் படிக்கும்போதுஎந்தவிதத் தடையோ மனச்சோர்வோ ஏற்படுவதில்லை. மிகச் சிக்கலான வணிக அரசியலைக்கூட படிப்பவர்களுக்குஅழகாகப் புரியவைத்து விடுகிறது மருத்துவரின் எளிமையான விளக்கமுறை. & வழக்கறிஞர் அ.அருள்மொழி.