
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
A compilation of historical accounts detailing how great minds utilized their time in solitary confinement and prisons to read, write, and further their revolutionary causes.
₹330
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitics, History
- PlacesVarious Prisons
- Time Period20th Century
- Ideal ForAdults, Students
- Age RangeAdults, Students
- Reading LevelIntermediate
- MoodHeroic
பகத்சிங்கின்சிறைவாழ்க்கை, தமிழில் தோழர் சி.ஏ.பாலனின் 'தூக்கு மர நிழலில்' போன்றநூல்களைப் படித்தவர்களுக்கு சிறைக் கொடுமைகள் பற்றி நன்கு அறிய முடியும். ஆனால்இது, நிறைந்த மனிதாபிமானம் கொண்ட ஒரு சிறை அதிகாரியின்டைரிக் குறிப்புகளாக, மொத்தமாய்ப் பார்த்தால் சிறைக் கைதிகளின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நாவலைப்போல் விரிகிறது. மதுரைச் சிறையில் 'அரசமரம்', 'மாமரம்' குவாரண்டின்களில் நானும் பல மாதங்கள் அரசியல்கைதியாக இருந்தேன். அங்கு நிகழ்ந்த கலைஞர்களின் ஆடல் பாடல்களை மதுரைநம்பி அழகுற பதிவு செய்துள்ளார்.
எஸ்.ஏ.பெருமாள்
தோழர்மதுரை நம்பியின் இந்நூல் சுயசரிதைத் தன்மை கொண்ட ஒரு வரலாற்று ஆவணமாகநம் கைகளில் கிடைத்துள்ளது. ஒரு நாவலுக்குண்டான உணர்ச்சிவேகமும் காலத்தொடர்ச்சியும் சமூக ஆய்வும் கலந்துஒரு முழுமையான வாழ்க்கைத் தரிசனத்தை இந்நூல் தருகிறது. 80களில் சிறைக் காவலராகப் பணியேற்று 2020 வரையான நாற்பது ஆண்டு காலத்தில், அவர் சிறைக்குள் சந்தித்தமனிதர்கள் பலருடைய சுருக்கமான வாழ்க்கையை அறியும்போது பல நாவல்களைப் படித்தஉணர்வு கிடைகிறது.
ச.தமிழ்ச்செல்வன்

