
தங்கர் பச்சான் கதைகள்
A compilation of evocative stories portraying the unfiltered lifestyle, social dynamics, and deep-rooted human emotions of Tamil village communities.
₹340
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Rural Lifestyle
- PlacesTamil Nadu Villages
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodEarthy and Intense
செம்புலம் எனத் தன்மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர்பச்சான், மண்ணைவிட்டு வெளியேறிவாழ நேர்ந்துவிட்ட மனங்களின்மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின்மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிபடுத்தும்மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர்பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும்காட்சிகளும் அவரை மண்சார்ந்தகலைஞராக வைத்திருக்கின்றன.
மரபைப்பற்றிய ஏக்கம், மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்திருக்கும்வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில் பதிவு செய்துவிடுபவை இவரது கதைகள். காட்சிக்கலையின் நிர்பந்தங்கள் மறுத்த எளிமையின்வழியே நுட்பமானஅழகுகளையும் ஊடகங்களால் மறக்கபட்ட மனிதர்களையும்பதிவு செய்யப் பயின்ற இக்கலைஞனுக்கு கதை சொல்வதன் வழியேதன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. ஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் இவரது கதைப்பரப்பில் இன்னும் இன்னும் சொல்லப்பட வேண்டிய மண்ணின் கதைகள் நினைவூட்டப்படுகின்றன.

