
வாக்கப்பட்ட பூமி
The story delves into the lives of people uprooted from their homeland, exploring their struggles in a new environment and their undying love for the soil they left behind.
₹270
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociology, Human Geography
- PlacesVillages / Cities
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodSentimental
இயக்குனர்சுசி கணேசன், மதுரை மாவட்டம், வன்னிவேலம்பட்டி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். 12வது வகுப்புவரை கல்லுப்பட்டிகாந்தி நிகேதன் பள்ளியிலும், B.Sc., படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியிலும், B.Tech படிப்பை சென்னை எம்.ஐ.டி- கல்லூரியிலும் முடித்தவர். எம்.ஐ.டிபடிப்பில் Best Outgoing Student விருதுவாங்கியவர். கல்லூரிக் காலங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பிரபல இதழ்களில் மாணவ பத்திரிகையாளராகவும், பின்பு தமிழன்எக்ஸ்பிரஸ் தினமணியில் கட்டுரையாளராகவும் எழுதிய அனுபவம் கொண்டவர்.
விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே-2 படங்களால்அதிகம் பேசப்பட்டவர், தமிழக அரசின் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றவர். கந்தசாமி படத்தின் உட்கருத்தை மெய்பிக்கும்விதமாக, உசிலம்பட்டி அருகே இரண்டு கிராமங்களை தத்தெடுத்து, அவ்விரு கிராமங்களின் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தவர். பிறந்த ஊரிலிருக்கும் நடுநிலைப் பள்ளியைஉயர்நிலைப் பள்ளியாக்க ஒரு ஏக்கர் நிலம்வாங்கி கிராமத்திடம் கொடுத்து வன்னிவேலம் பட்டியில் உயர்நிலைப் பள்ளி வருவதற்குக் காரணமாக இருந்தவர்.
கனவுகளின்உயரத்தை நாளுக்கு நாள் உயர்த்திக்கொண்டே செல்லவிரும்பும் சுசி.கணேசன், தயாரிப்பாளர்ஆக விரும்பியதும், குடும்பத்தோடு மும்பைக்கு இடம்பெயர்ந்தார். Shortcut Romeo எனும்இந்தித் திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர். தற்போது Dil hai gray எனும்திரைப்படத்தை இயக்கியும் முடித்திருக்கிறார். பல்வேறு கிராமங்களில் பல நாட்கள் பயணம்செய்து பல நூறு மனிதர்களைசந்தித்து, தான் வாழ்ந்த 18 வருடஇளம்பருவ கிராமத்து வாழ்க்ககையை ஒப்பிட்டு, 32 வாரங்கள் தினமணி கதிரில் தொடராக எழுதியதொகுப்பே இந்த ‘வாக்கப்பட்ட பூமி’.
சுசிகணேசன், (Susi Ganesan) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 1969 ஆம் ஆண்டு ஆகத்துமாதம் 25 ஆம் நாளன்று இவர்பிறந்தார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாளராகவும் இருந்துள்ளார். ஆனந்த விகடனில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்விப் பயிற்சியால் பொறியாளர் ஆவார்.

