
லா.ச.ரா (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
An anthology that showcases the author's ability to dive into the deep subconscious of his characters, mostly revolving around complex family dynamics.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPsychology, Family Dynamics
- PlacesTamil Nadu
- Time Period20th Century
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelAdvanced
- MoodMystical and Emotional
அப்பாவைப் பொறுத்தவரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே எழுதத் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதும் இல்லை. அப்பாவின் சிறுகதைகள் பல அவரது நினைவின் அடிவாரத்தில் வருடகணக்கில் ஊறிகிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த சுருதி குலையாமல் மீண்டும் தொட்டும் கொள்ள தன் நினைவை பழக்கிகொண்டவர். அவர் கதை எழுத உட்கார்ந்ததில்லை. கதை மனதில் உட்கார ஆரம்பிக்கும் போது எழுத ஆரம்பிப்பார. கதை தன்னை நடத்திக் கொள்ளும்போது அதன் உருவத்தை எழுத்தாக்கினார்.
பெண் குழந்தை தானாக தன் பருவம் அடைந்து கன்னியாவதைப்போல அப்பாவின் கதை எவருடைய வற்புறுத்தலுமின்றி தன் பக்குவம் அடைந்து கன்னிமை அடையும். அவரும் தன் கதையின் வேளைக்கு தருணத்திற்கும் காத்திருத்தார்.வ வற்புறுத்தப்படாத சழுமையில் அவர் கதைகள் இருப்பதால்தான் சிரஞ்சீவித்துவம் பற்று விளங்குகின்றன.
லா.ச.ரா. சப்தரிஷி

