உதட்டின் மேல் ஒரு விரல்

உதட்டின் மேல் ஒரு விரல்

Yet to reviewPublished By: discovery-publications

The story navigates the silent spaces between people, highlighting how unsaid words often carry the heaviest meanings.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHuman Behavior, Relationships
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodReflective
பிறகவிதை நூல்களிலிருந்து இந்நூல் சற்று மாறுபட்டதாக அமைந்துள்ளது. பேச்சு வழக்குச் சொற்கள் ஆங்காங்கே கவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கவிதைகளுக்கு மேலும்அழகு கூட்டுவனவாக உள்ளன. நாட்டுப்புற ஆய்வாளனாக இதனை வரவேற்கிறேன். இம்முறையில்தான்உண்மையான உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன. பேச்சு வழக்கு உள்ள மொழியே வாழ்கின்றமொழியாகும். இதன் காரணமாகவே இந்நூலில்உள்ள கவிதைகள் வாழும் கவிதைகளாக விளங்குகின்றன. -சி.சத்தியசீலன். காதல்எனது பழக்கங்களைப் பறித்துக் கொண்டு கவிதையால் என்னை நிரம்பி வழியச் செய்தது என்றான் ரூமி. சுரேஷ் அவர்களின் கவிதைகளில் காதல் நிரம்பிவழிகிறது. அழகை, தாகத்தை ஏக்கத்தை, பிரிவை, உறவை எனக் காதலின்எல்லாப் பரிமாணங்களையும் தன் கவிதைகளில் காட்டியுள்ளார்கவிஞர். கவிதையில் முரண் எப்போதுமே அழகு! எந்த ஒரு விஷயத்திலும்முரண் ஏற்படும்போதுதான் ஒரு புதிய கண்டுபிடிப்போ, தத்துவமோ, புரட்சியோ, மாற்றமோ நிகழ்கிறது. அந்த வகையில், அமைதியையேஅறியாத கடலையும் அலையையும் ஏன் நாடுகிறது அமைதியைத்தேடும் மனம் என்றொரு அற்புதமானமுரணை நம் கண்முன் வைக்கும்கவிஞருக்கு ஒரு சபாஷ். -பித்தன்வெங்கட்ராஜ். வகைவகையாய் சிகை அலங்காரம் செய்துபார்க்கிறார். கடைசியில் காதலி விரல் கோதி கலைத்துவிடுவதுதான் அழகாய் இருக்கிறதுஎன்று முடிவு செய்கிறார். அடுக்கி வைத்து அதனதன் இடத்தில் இருக்கும் வீட்டின் நேர்த்தியைவிடக் குழந்தை சிறுக்கி கலைத்துப்போட்ட கலை ரசனைப் போல்காதலி விரல் பட்ட தலையை ரசித்திருக்கிறார். -ஸ்ரீதேவி கண்ணன்.