
புலிசாரை
A gripping tale of village feuds, untamed spirits, and the instinct for survival among the resilient people of a harsh landscape.
₹130
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsRural Life, Conflict
- PlacesTamil Nadu Villages
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodIntense
தமிழர்களின் பெரும் மரபு சார்ந்த ஒன்றாக ஜல்லிக் கட்டு எப்போதும் முன்னிறுத்தப்படுவது வழக்கம். அவை எக்காலத்திலும் தமிழரின் இனவரையறைக்குள் சுழன்றுகொண்டே வருகிறது. ஆதிதொட்டு சமீபத்திய புரட்சி வரை காலம் அதன் முக்கியத்துவத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கையில், அதை சார்ந்த வாழ்க்கைமுறையைக் கொண்ட நபர்களை வெறும் வீரம், பெருமை என்ற ஒன்றினுள் மட்டும் அடக்கிவிடக் கூடாது என்கிற எண்ணத்திலிருந்து வெளிப்பட்ட கதை இது. அதனால் என்னவோ இக்கதை வாடியின் களத்தினுள் பெரும்பாலும் பயணிக்காது அதைச்சுற்றி சுழலும் மனிதர்களின் எண்ணங்களில் தன்னை வடித்துக் கொண்டது. களத்திற்குமுன் அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே அவர்களின் வாழ்க்கைமுறை பின்னப்பட்டிருப்பதை அறிகையில் ஜல்லிக்கட்டின் களத்தை பற்றிய பார்வை நமக்கு விரிவுபடும். அவைகள் வெளிக்கொணரும் உண்மைகள் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். இங்கு எதைப் புனிதமாக ஆக்கவேண்டும் என்கிற வரையறை ஒருவர் கையில் இருக்கும்வரை நாம் எதிர்கதையாடல்களை முன்வைத்தே தீரவேண்டும்.
லட்சுமிஹர்

