யதி தத்துவத்தில் கனிதல்

யதி தத்துவத்தில் கனிதல்

Yet to reviewPublished By: thannaram

A deep dive into the spiritual teachings, monism, and equality-driven social philosophies propounded by Narayana Guru.

₹550

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPhilosophy, Social Reform
  • PlacesKerala / India
  • Time Period19th-20th Century
  • Ideal ForSpiritual seekers, Scholars
  • Age RangeSpiritual seekers, Scholars
  • Reading LevelAdvanced
  • MoodContemplative
நான் சந்தித்த பெரிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மீதெல்லாம் பெரும் பாறைகள் இருந்தன. நான் மிக மதித்த எழுத்தாளர்கள் மீதோ அப்பாறைக்குமேல் அவர்களுடைய தன்னகங்காரத்தின் இன்னொரு பெரும்பாறை, நித்யா குழந்தை போல இருந்தார். அப்போது பிறந்து எழுந்து வந்தவராக, துயரமே இல்லாதவராக, சுமைகளற்ற பட்டாம்பூச்சி போல துடிக்கும் வண்ணங்களுடன். தினம் நூறு பேர் தங்கள் நூறுவகை துக்கங்களுடன் அவரைத் தேடி வந்துகொண்டுதான் இருந்தனர். பல துறைகளில் பல்லாயிரம் நூல்களை ஆழக் கற்ற அறிஞர் அவர். அனைத்துக்கும் மேலாக முதுகெலும்பில் கடுமையான மூன்று அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டு தீராத வலியை எப்போதும் அனுபவித்து வந்தார். ஆனால் அவர் என் மகன் அஜிதனைவிட துறுது றுப்பாக இருந்தார். வியப்பிலும் ஆனந்தத்திலும் விரிந்த கண்களுடன் பூமியில் தீராத புதுமையை அள்ளிப்பருகிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவருடன் காலைநடை சென்றேன். அக்கணமே அவர் என் ஆசிரியரானார். என் மனதில் இருந்த ஆசிரியர் படிமங்கள் அனைத்துக்கும் ஒட்டுமொத்தமானார், வாழ்வின் சாரத்தை எனக்குக் காட்டிய 'ஞானகுரு' யதி. - ஜெயமோகன்