
எல்லோருக்குமான
Accessible and highly relatable essays covering topics from family dynamics to societal responsibilities, aimed at bettering everyday life.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLife Skills, Society
- PlacesIndia
- Time PeriodContemporary
- Ideal ForGeneral Audience
- Age RangeGeneral Audience
- Reading LevelEasy
- MoodThoughtful
தமிழர் சமயங்களின் ஆதிச் சரடை மிக அழகாக கைப்பற்றியிருக்கும் சூரியமூர்த்தி ஏனைய மதங்களில் இடம்பெறும் மூட நம்பிக்கைகளை சாடியும் இருக்கிறார். மதத்தின் பேராலும் சாதியின் பேராலும் இன்று நாட்டில் நிகழும் வன்முறை வெறியாட்டங்களை ஆங்காங்கே கண்டித்துமிருக்கிறார். ஒரு கவிஞனின் சமூக செயல்பாட்டை அக்கவிதைகளில் பார்க்க முடிகிறது. கவிஞன் என்றால் வானத்திலிருந்து அப்படியே நேரடியாக மண்ணில் குதித்தவன் என்பதுபோல் எண்ணிக்கொள்ளாமல், பாழ்படும் ஏழைகளின் பக்கத்திலிருப்பவனே படைப்பாளி என்பதையும் இத்தொகுப்பில் நிரூபித்திருக்கிறார்.
"கருவின் விதையாக கவிதை முளைப்பதுண்டு' என்கிறார். அவர் கருவென்று சொல்லது சமூக சிந்தனை என்று நான் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில், இத்தொகுப்பு முழுக்க அவ்விதமே அவர் கவிதைகள் அமைந்திருக்கின்றன.
பொதுவாக, கவிஞர்கள் இயற்கையின் உபாசகர்களாகத் தங்களைக் கருதிக்கொள்வர். கடலை, மலையை, கானகத்தை என எதுவெல்லாம் இயற்கையால் விளைந்ததோ அல்லது இயற்கையாக அறியப்படுகிறதோ அதையெல்லாம் புகழ்ந்துபாடும் மனமுடையவர்களாக தங்களைக் காட்டிக்கொள்வர். ஆனால் சூரியமூர்த்தி அப்படியல்லாமல் இயற்கையையே கேள்வி கேட்பவராக இருக்கிறார். ஆழிப்பேரலையை ஒட்டி இம்மண்ணில் நிகழ்ந்த சேதங்களை முன்வைத்து அவர் இயற்கையிடம் நியாயத் தராசை நீட்டியிருக்கிறார். தம் பக்கமுள்ள நியாயங்களை அடுக்கும் துணிச்சல் படைப்பாளனுக்கு மட்டுமே உண்டு என்பதால், இரண்டே பக்கங்களில் இயற்கையை அவர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி இருப்பது வியப்பளிக்கிறது.
கவிஞர் யுகபாரதி

