
கன்னி நிலம்
An epic novel depicting the collectivization of agriculture in the Don River region of Soviet Russia and the resulting social upheaval.
₹750
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsAgriculture, Communism, Society
- PlacesSoviet Russia (Don Region)
- Time Period1930s
- Ideal ForAdults, History Buffs
- Age RangeAdults, History Buffs
- Reading LevelAdvanced
- MoodIntense
"கன்னி நிலம்" என்பது 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான மிகைல் ஷோலோகோவ் எழுதிய ஒரு நாவல். இந்த வரலாற்று நாவல் 1930 களின் முற்பகுதியில் சோவியத் யூனியனில் கூட்டுப் படைப்புகள் உருவாக்கப்பட்ட காலத்தில் நடைபெறுகிறது. தெளிவான கதைசொல்லல் மற்றும் மனித நிலையைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலுடன் ஷோலோகோவ் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் சமூக மாற்றங்களின் போது நடந்த ரஷ்யாவின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளைப் பற்றியதான ஒரு படத்தை வரைகிறார்."கன்னி நிலத்தில்" விவரிக்கப்பட்ட ஆண்டுகள் கடுஞ்சோதனையான ஆண்டுகளாகும். ஒரு மிகமிகக் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. ஒருசில பக்கங்கள் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவன போல இருப்பதற்கான காரணம், ஒரு மிகத் துயரமிக்க நேரங்களில் கூட தங்களது அவலங்களை நல்ல நகைச்சுவையுடன் சந்திக்க, ரஷ்யர்கள் எதிலும் நலமே காணும் நம்பிக்கை கொண்டவர்களாகத் திகழ்ந்தது தான்" என்று இந்த நூலுக்கான முன்னுரை எழுதிய அனதோலி கலீனன் குறிப்பிட்டிருக்கிறார். 1932 களில் வெளிவந்திருக்கின்ற இந்த நாவல், இப்போதும் ரஷ்யர்கள் மீள்வாசிப்பு செய்வதற்கான பொருத்தப்பாடுள்ளதாகும். ஏனெனில் மேலே குறிப்பிட்டுள்ள கடுஞ்சோதனையானது தற்போது அங்கே வேறு வடிவில் இருக்கின்றதை இவ்வுலகம் அறிந்துதானிருக்கிறது. இந்நாவல் இரண்டு பாதியாக வெளிவருகிறது. முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் இடையே ஒரு கூர்மையான துண்டிப்பு உள்ளது. முதல் பகுதி சமூக மற்றும் உளவியல் ரீதியான போராட்டத்தைப் பற்றி பேசுகிறது. இரண்டாவது பகுதி தொடர்பில்லாத நகைச்சுவை நாடகங்களின் தொடர் அதுவே ஒரு பகடியாக மாறுகிறது.
புரட்சிக்குப் பின்னபான சோவியத் ரஷ்ய அரசால் உயர்ந்த பதவியில் அமர்த்தப் பட்ட ஷோலக்கோவ் சுய லாபத்துக்காகத் தான் கண்டவற்றை திரித்தும், மறைத்தும் எழுதிய பிரச்சார நாவல்தான் கன்னி நிலம். அதில் அந்த மகத்தான கலைஞனின் எல்லாகலைத் திறனும் உள்ளது, ஆனால் காலாதீதமாகச்செல்லும் இலக்கிய விவேகம் இல்லை என்று ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். 'கண்டவற்றைத் திரித்தும்' என்ற தனது கருத்துக்கு ஜெயமோகன் எந்தச் சான்றும் வைக்கவில்லை. வைக்க முடியாது என்று அனைவருக்கும் தெரியும் இலக்கிய விவெகம் இல்லை என்று வடிகட்டிய பொய்யையும் அவர்சொல்லியிருக்கிறார் ஜெயமோகன் உட்பட வேறு எவருமே உண்மைக்கு எதிராக வாதிடுவது அத்தனை சுலபமான காரியமல்ல. கன்னி நிலம் ஓர் உண்மையின் ஊற்று.

