எனது சாயல் என் மீது வீழ்வதில்லை

எனது சாயல் என் மீது வீழ்வதில்லை

Yet to reviewPublished By: discovery-publications

A lyrical exploration of feminism, personal identity, and the struggle to find one's true self outside of societal expectations.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsIdentity, Feminism
  • Time PeriodContemporary
  • Ideal ForPoetry Lovers, Adults
  • Age RangePoetry Lovers, Adults
  • Reading LevelIntermediate
  • MoodContemplative
எழுதிப் படிக்கின்ற சாதனைகளில் திருநங்கைகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதைச் சீனத்தில் காகிதத்தைக் கண்டபிடித்த சாய் லூன் (T sai lun ) முதல் இன்று இந்தியாவின் முதல் திருநங்கைப் பேராசிரியர் ஜென்சி வரை நம் முன்னே சாட்சியாக இருக்கிறார்கள். படித்தது ஆங்கில இலக்கியமாக இருந்தாலும் தமிழிலக்கியத்தையும் தவறாமல் வாசித்து எனது சாயல் என்மீது வீழ்வதில்லை என்கின்ற கவிதை நூலையும் அவர் எழுதியிருப்பது பெருமிதமளிக்கிறது. நூலின் தொடக்கத்திலேயே கடலில் அலையடிப்பதால் வியந்து பார்க்கிறோம் என்றும், குளத்தில் அடங்கியுள்ள நீரின் மௌனங்களை யாரும் புரிந்துகொள்வதில்லை என்றும் எழுதி நூலுக்கான கட்டியத்தைக் கட்டமைத்துவிடுகிறார். நூல் முழுவதும் பூடகமான கவிதை வரிகள் நம்மை வசீகரிக்கின்றன. படிமங்களையும், உள்மன உணர்வுகளையும், அகவயப்படுத்துகின்ற சிந்தனைகளையும், எண்ணற்ற அனுபவங்களையும் இந்தக் கவிதைகள் மென்மையாகப் பேசுகின்றன. அவற்றின் தழும்புகளும், காயங்களும், புறக்கணிப்புகளும் முகத்தின்மீது தெறிந்த நம் நீளுறக்கத்தைத் தெளியச் செய்கின்றன. இறையன்பு