
மொழி இழப்பு மொழி அழிவு மொழி மீட்டு
A deeply researched academic work diagnosing how native languages fade away under global pressures and the crucial methods required to preserve them.
₹130
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLinguistics, Society
- PlacesGlobal / Tamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAcademics, Language Enthusiasts
- Age RangeAcademics, Language Enthusiasts
- Reading LevelAdvanced
- MoodInformative
பேரா.வ.ஞானசுந்தரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கீழைத் தேய இலக்கியம், முதுகலை மொழியியல் மற்றும் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் மொழி கற்பித்தல், மொழிக் கற்பித்தலுக்கான பாட நூலாக்கம், திணைக்குடி மொழிகளுக்கான விளக்கமுறை பகுப்பாய்வு, அழிநிலைப் பழங்குடி மொழிகளைப் பாதுகாத்தல் பேராசிரியர் மற்றும் துணை இயக்குநராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்படப் பணியாற்றிக் கல்வித் தொண்டாற்றி உள்ளார். தமது ஆய்வுப் பணிகள் காலத்தின்போது கோயம்புத்தூர் மாவட்டத் திருமூர்த்தி மலைப் பகுதி வாழ் எரவள்ளா பழங்குடியினரது மொழியைத் தற்செயலாகக் கண்டுபிடித்து அதனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் அதற்கு இலக்கணமும் இவர் உருவாக்கினார்.
இவர் பல் வேறு தனி வரைவி நூல்களையும் படைத்துள்ளார் அவற்றுள் கருநாடக மத்தியப் பல்கலைக்கழகத்திற்கென இவர் எழுதிய பெட்ட குறுமர் மொழிக்கான வரைவு இலக்கண நூலும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திற்கென எழுதிய எரவள்ளா இலக்கண நூலும் குறிப்பிடத்தக்கவை.
திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் திராவிடமொழியியல் பேரவையின் துணைத் தலைவராகச் சிறப்புறப் பணியாற்றிய பேரா. ஞானசுந்தரம் அவர்களுடைய வாழ்நாளின் நிறைவுப் படைப்பாக இந்நூல் வெளிவருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 14 இல் இவ்வுலக வாழ்வை நீத்த அவர்க்குப் புகழ் அஞ்சலியாக இந்நூலை வெளியிடுகிறோம்.

