வதைமுகம்

வதைமுகம்

Yet to reviewPublished By: ncbh

A dark yet profound exploration of characters facing intense emotional and societal torments, and their fight for survival.

₹190

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPsychology, Survival
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodDark
பெண்களின் அகநிலையினை எழுத்துக்களாக்கும் தருணங்களில் நான் எப்பொழுதும் என்னை எதிர்பாலின நிலைக்குள் கூடடைந்த பிறகே எழுதத் தொடங்குகிறேன். ஆணோடு கவர்ச்சியுற்று கூடத் தொடங்குகிறேன். அப்பொழுது எனக்குள் கனத்த மார்பகங்கள் பூக்கத் தொடங்குவதோடு. எனக்கு அருகில் பசியில் கை கால்களை உதறி அழும் குழந்தைக்கு முலை ஈத்தக் கொடுக்கிறேன். பெண்ணுக்குள் கொப்பளித்துப் பெருகியோடும் இந்திரியத்தினை எனக்குள் ஒரு பெண் மடைமாற்றுகிற கணத்தில் எனது கருப்பை அவற்றினை எழுத்துக்களாக சூல்கட்டத் தொடங்குகின்றது. அதற்குப் பின்னர்தான் வாழ்விற்கான சார்புநிலை என்னைத் தொற்றிக்கொள்கிறது. அந்த நிலையில் வன்முறைகள் என்மீது திணிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு அவற்றை வாழ்வின் ஒழுக்கங்களாகக் கொண்டு வாழத் தொடங்குகிறேன். பல நேரங்களில் எனது பாலுறுப்பு கழிவறை இருக்கையாகப் பயன்படுவதை அதனைப் பயன்படுத்துபவன் உணருவதே இல்லை.