
கேரித் தீவு
A tense and atmospheric tale set on Carey Island, weaving together the destinies of stranded souls facing nature and their own pasts.
₹820
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSurvival, Mystery
- PlacesCarey Island
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodAtmospheric
மலேசியத் தோட்டத் தொழில் வரலாற்றில் கேரித் தீவு (Carey Island)!) சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.மலேசியத் தீபகற்பத்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சிலாங்கூர் மாநிலத்தில் இத்தீவு அமைந்துள்ளது. கிள்ளான் துறைமுகத்தின் தெற்கில் தோராயமாகப் பதினாறு கிலோமீட்டர் தூரத்திலும் பந்திங் நகரின் (Banting) வடக்கிலும் இத்தீவு இடம்பெற்றுள்ளது.
'கேரித் தீவு: தமிழரின் வரலாற்றுத் தடம்' எனும் தலைப்பில் அமைந்துள்ள இந்நூல் சற்றேறத்தாழ இரண்டு ஆண்டுகளின் தொடர் தேடல் வாயிலாகப் பெறப்பட்ட தகவல்களின் தொகுப்பு. கேரித் தீவின் மேம்பாட்டிற்குத் தமிழர்கள் ஆற்றிய அரும்பணிகள் யாவும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் உள்ளன. உலகத்தார் சிந்தனையிலிருந்து நீர்த்துவிட்ட ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தோண்டித் துலக்கியுள்ளார் நூலாசிரியர் சீ. அருண். இதன் வாயிலாகக் கேரித் தீவுத் தமிழர்கள் மட்டுமின்றி மலேசியத் தமிழர்களின் அனைவருக்கும் பெருமையூட்டும் வரலாறாக இந்நூல் அமைந்துள்ளது.

