
இட்டளம்
A culturally rich narrative exploring foreign landscapes, human struggles, and universal emotions translated beautifully for Tamil readers.
₹130
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Human condition
- PlacesGlobal
- Time Period20th Century
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodThought-provoking
கிராமமோ, நகரமோ, நாடோ பெரும்பாலும் எல்லைக் கோடுகள் வகுக்கப்படும்போது, மக்களின் உணர்வோ, காலம்காலமாய் அவர்களக்குள் தொடர்ந்து வரும் உறவு முறைகளோ, பண்பாடோ, கலாச்சாரமோ எதுவுமே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. யாரோ சில அதிகாரிகள் ஏதோ ஒரு நகரத்தின் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு. வரைபடங்களின் மேல் கோடுகளைக் கிழித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். வரைபடங்களில் தென்படும் அக்கோடுகள் நிலங்களில் வரையப்படும் போதுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.
கோடுகள் கிழிக்கப்பட்டதும், வேலிகள் இடப்படும் உறவுகள் துண்டாகும், பரிமாற்றங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். அப்படியான எல்லைக் கோடுகள் அதனால் உண்டாகும் வலிகள் என இத்தொகப்பு முழுவதுமே உணர்வுகளின் குவியலாய், அழுத்தம் நிறைந்ததாய் இருக்கிறது.
எந்த ஒரு கதையையும் படித்துவிட்டு இலகுவாய் நகர முடியவில்லை. முழுவதையும் வாசித்து முடிக்கையில் ஒன்றே ஒன்று தோன்றியது. வாய்ப்பிருந்தார் ஒரே ஒரு முறை அந்த எழுத்தாளரை நேரில் பார்க்க வேண்டும், கேட்பதற்கு எதுவும் இல்லை. இத்தனை அழுத்தங்களை உள்ளே கொண்டிருக்கும் அந்த முகத்தை வெறுமனே பார்க்க வேண்டும்.

