
ஒதுக்கப்பட்ட மக்கள்
An analytical book that sheds light on the systemic oppression faced by the marginalized and their continuous struggle for basic human rights and dignity.
₹650
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociology, Politics
- PlacesIndia
- Time PeriodHistorical to Contemporary
- Ideal ForActivists, Academics
- Age RangeActivists, Academics
- Reading LevelAdvanced
- MoodSerious
புரட்சியாளர் அம்பேத்கர் எனும் மாமனிதர் இந்தியாவில் தோன்றாமல் போயிருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தின் ஜனநாயகம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதே பெரும் யோசனையாக இருக்கிறது. சனாதன சக்திகளின் கை மேலோங்கி இருந்த அந்தக் காலத்தில், எந்த ஊடக ஆதரவும் இல்லாமல், மக்களிடையே புகழ் பெற்றிருந்த அனைத்து ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்த நிலையிலும் தனிப் பெரும் தலைவராக மக்களின் துணையோடு அவர்களுக்குத் தேவையான பலவற்றைச் சாதித்திருக்கின்றார்.
டாக்டர்.தொல்.திருமாவளவன்
நாடாளுமன்ற உறுப்பினர்.
டாக்டர்.அம்பேத்கர் ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தவர். மக்களைப் பயிற்றுவிக்கும் நோக்கில் உள்நாட்டு மக்களும் வெளிநாட்டவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் ஏராளமானக் கட்டுதைகளை எழுதினார். அந்த அடிப்படையில் டாக்டர்.அம்பேத்கர் எழுதத் திட்டமிட்ட பெருநூல்களில் ஒன்று ஒதுக்கப்பட்ட மக்கள் (people at bay ) என்பதாகும். அது பல கட்டுரைகளாக சிதறிக் கிடந்தது. முதல் முறையாக தனிப்பெரும் நூல் வடிவம் பெற்று வெளியாகிறது.
கௌதம சன்னா

