எளியமுறை விசையியல்

எளியமுறை விசையியல்

Yet to reviewPublished By: discovery-publications

A pedagogical guide breaking down the fundamental laws of motion, force, and mechanics in simple Tamil.

₹1,400

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPhysics, Science
  • PlacesGlobal
  • Time PeriodTimeless
  • Ideal ForStudents, Teachers
  • Age RangeStudents, Teachers
  • Reading LevelIntermediate
  • MoodInformative
இயற்கையில் நடக்கும் எல்லா இயற்பியல் நிகழ்வுகளுக்கும். ஏதோ ஒருவித இயக்கம் அடிநாதமாக விளங்குகிறது என்பதால் விசையியலின் முக்கியத்துவம் சொல்லாமலே விளங்கும். எவ்வெவற்றைப் பற்றிய இயக்கம் விசையியலில் பேசப்படுகிறது என்ற கேள்விக்கு துகள் (particle) மற்றும் அலை (wave) என விடையிறுக்கலாம். துகள் பற்றிய இயக்கம். உரிய விதிகள் மற்றும் கோட்பாடுகளைத் தழுவி விரிவாகவும், தெளிவாகவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. விசையியல் பாடப் பயிற்சியைத் தொடங்குவதற்கோ, இந்தத் துறை பற்றிய அறிவை முறைப்படுத்திக் கொள்வதற்கோ, நாட்டம் உடையவற்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். நம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு புரியாத புதிர் விசையியல்' என்ற கண்ணோட்டம் கொண்டோரின் அச்சத்தையும் பீதியையும் அகற்றும் வகையில், நூலில் அத்தியாயங்களின் வைப்புமுறை (arrangement) ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித்தொடர் போன்று அமைந்துள்ளதால், மாணவர்களின் கற்கும் ஆர்வம் நண்கு தூண்டப்படும் Dr.R.D.ராஜன், இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னை. நிறுவனத்தில் இயற்பியலில் MSc. பட்டம் பெற்றுப் பின்னர், அண்ணா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியவர். இயற்பியல் துறையைத் தன்னுடைய தொலைநோக்குப் பார்வையால் பல்கலைக்கழகத் தரத்திற்கு உயர்த்தி புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்ற பெருமைக்குரிய பேராசிரியர் Dc. S. நடராஜன் அவர்களின் தலைமையின் கீழ் பணிபுரிந்தைப் பெரும் பேராகக் கருதுகின்றார். அன்னாரின் தலைமையின் கீழ் அறிவை நன்கு விசாலமாக்கிக் கொள்ள ஏதுவாக இருந்தது என்றும் அதன் சாட்சியே இந்நூல் என்றும் குறிப்பிடுகிறார். இந்நூலின் இணையாசிரியர் திருமதி. D. பொற்கொடி அவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் M.Sc. M.Phil பட்டம் பெற்று, பின்னர் குருநானக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சவாலான இந்நூலை எழுதி முடிக்க சுமார் 5 ஆண்டுகால அவகாசம் எடுத்துக் கொண்ட இந்த இணையர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையில், மனம் தளராமல் இந்நூலை எழுதி முடித்துள்ளனர்.