
இங்கிவரை நாம் பெறவே
A deeply emotional story navigating the sacrifices and profound bonds shared by individuals trying to preserve their love and unity.
₹220
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsFamily, Love
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelEasy
- MoodSentimental
ஆளுமைகளின் வரலாறு என்பது சமூகத்தின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் வரலாறாகவும் தொழிற்படுகிறது. ஆளுமைகளினூடாகச் சமூக அசைவியக்கத்தை இனங்காண்பது சுவையான முறையியலாகும் என்று வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அதைத்தான் செய்கின்றன.
சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஜெ. சுடர்விழி ஆளுமைகள், மரபிலக்கியம், நவீன இலக்கிய விமர்சனங்கள் சார்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார். தமிழின் முக்கியமான ஆளுமைகள் சிலரைப் பற்றி அவர் எழுதிய தனித்துவமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.
வி.மு. சுப்பிரமணியம், பரிதிமாற்கலைஞர், கு. அழகிரிசாமி, அம்பை, ஆ.இரா. வேங்கடாசலபதி, பாமா, இமையம் முதலான பல்வேறு ஆளுமைகளின் பின்புலம், வாழ்க்கை, செயல்பாடுகள் ஆகியவற்றைத் தொகுத்துக் தருவதோடு, அவர்களுடைய பங்களிப்புகள் குறித்த தனித்துவமான பார்வையும் இதில் வெளிப்படுவதைக் காணலாம்.

