குருதிவழி

குருதிவழி

Yet to reviewPublished By: யாவரும்

A dramatic narrative centered around generational conflicts, vengeance, and the inescapable ties of blood and family.

₹500

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsFamily, Vengeance
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodIntense
நீர் வற்றிப் போன நிலத்தில், இன்னமும் சூட்டோடு இருக்கும் குருதி படிந்த வேலில் இருந்து விழும் ஒவ்வொரு துளியின் வரலாற்றையும் அந்த மண் மட்டுமே அறியும். மண்ணின் அடியில் மறைந்திருக்கும் கதைகளுக்கும், மனித உடல்களில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு மறைபாதை இருக்கிறது அதுவே குருதிவழி. குருதிவழி என்பது ஒரு ஊரின் கதையல்ல அது மனித மனத்தின் ஆழத்திலிருந்து எழும் குற்ற உணர்வின், முன்னோர்களின் பாவத்தில் அல்லது சாபத்தில் மறைந்த நிழல்களின் குரலாகும். இது ஒரு குடும்பத்தின் கதையாகத் தோன்றினாலும், ஒவ்வொரு தலைமுறையின் காயத்தையும் தாங்கி நிற்கும் இந்நிலத்தின் சமூக வரலாறாக மாறுகிறது. இந்நாவலின் கதாபாத்திரங்கள் சில வரலாற்றோடு சம்பந்தப்பட்டவர்கள். போதிலும் வரலாறு தர்க்கம் புனைவு என மூன்றிலும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் கதையாடல். வரலாறு, நினைவு, புனைவு ஆகியவை குறித்து வலுவான கேள்விகளை வாசிப்பின்பமளிக்கும் இலகுவான மொழியில் எழுப்பிச் செல்கிறது குருதி வழி.