
பதிலி
A desperate man takes on the identity of a deceased stranger to escape his past, only to find that the new life harbors darker, deadlier secrets.
₹400
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsIdentity, Crime
- PlacesUrban City
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodTense
அசோகமித்ரனிடம் இருக்கும் எளிமையான மொழியும் சரளமான நடையும் 'பதிலி' நாவலின் முதல் அவதானிப்பாக இருக்கின் றன. இந்நாவல், சுருத்தரிக்க இயலாமல் துவளும் ஒரு பெண்ணைப் பற்றித் துயரம் மீறிடப் பேசுகிறது. பல தளங்களில் கதை மொழியாக, தென்காசி வாசம் மிகுந்த சொற்கள். ஆச்சர்யமாக, அதன் அடுத்தடுத்த அத்தியாயங்கள் சென்னைத் தமிழில் இழைக்கப்பட்டிருக்கின்றன. தாவலாசிரியரின் எழுத்தின் வன்மையும் புனைவின் ஆழமும் கைகோர்த்து, இதை ஒரு கதையாகக் கருத விடாமல் வாழ்வின் நிலையாமை குறித்த சிக்கல்களாக்கி நம்மைச் சுட்டுப் பொசுக்குகின்றன. வாழ்வின் முக்கிய அம்சமாக நட்பைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது இந்நாவல்.
எழுத்தாளர் நிமோஷினி
பதிலி நாவல், மண் மணம் மாறாத அழகிய படைப்பு. பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம் என்கிற எழுதப்படாத விதியின் பிடியில் சிக்குண்டு தவிக்கும் நம் அநேகரும் சந்திக்கும் அன்றாடக் கதாபாத்திரங்கள் எழுத்துகளால் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காதல், நட்பு, உறவு, ஊர் வம்பு, புரளி பேசுதல், எல்லாம் கூடி வரும் சமயம் ஏற்படும் திடீர்த் தடங்கல்கள் என்று, அனைத்துமே கோர்த்தெடுத்த முத்துகள் போல ஒன்றோடொன்று வரிசை கட்டி வாசிக்கத் தூண்டும் தெளிவான எழுத்து ஓடை.
கீழை எம். ராசிம்

