
சிறை ஆதி முதல் அந்தம் வரை
A detailed sociological exploration of the penal system, the psychology of inmates, and the realities of incarceration.
₹225
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCriminology, Sociology
- PlacesPrisons
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodSomber
சிறைச்சாலை என்பது குற்றம் செய்தவர்களின் தண்டனைக்கான இடமாக மட்டுமல்ல, குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தும் இடமாகவும் அமைய வேண்டும். ஆனால் உண்மை நிலவரமோ முற்றிலும் வேறாக இருக்கிறது. சிறைத்துறை என்பது சிறைத்துறை அதிகாரிகள், காவலர்கள், சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் வட்டத்திற்குட்பட்ட ஓர் இருண்ட உலகம். 'முன்ன பின்ன செத்தால் தான் சுடுகாடு தெரியும்!'னு ஊர்ப்பக்கம் சொலவடை சொல்வார்கள். அதேபோல், ஏதேனும் தவறு செய்ததாலோ, போராட்டம் நடத்தியதாலோ, அநியாயத்தை தட்டிக்கேட்டதாலோ, அரசின் தவறுகளை அம்பலப்படுத்தியதாலோ ஏதோவொருவகையில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவர்களால் மட்டுமே சிறைச்சாலைகளின் நடைமுறைகளை அறிந்துகொள்ள முடியும். சாதாரண பொதுமக்களால் இவற்றை அறிந்துகொள்ள முடியாது.
இப்படியானதொரு சூழலில், சிறைச்சாலைக்குள் நடைபெறும் ஊழல்களை, தவறுகளை, மனித உரிமை மீறல்களை, பாலியல் அத்துமீறல்களை எக்கச்சக்கமான ஆதாரங்களுடன் அலசி அம்பலப்படுத்தக்கூடிய ஆவணமாக வெளிவந்துள்ளது இந்த 'சிறை' என்ற நூல்! குற்றவாளிகளுக்கு தண்டனை தரக்கூடிய ஓர் இடத்திலேயே பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவது எவ்வளவு பெரிய நகைமுரண்! அத்தகைய குற்றச்செயல்களில் சிறைத்துறை அதிகாரிகளும், அலுவலர்களும், காவலர்களும் இணைந்து ஈடுபடுவதும், அரசாங்கம் அளிக்கக்கூடிய நிதியில் ஊழல் செய்வதும் எவ்வளவு பெரிய அக்கிரமம்! அதைத்தான் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது!
-நக்கீரன் கோபால்

