திருப்பால்

திருப்பால்

Yet to reviewPublished By: இறைவி-வெளியீடு

An intimate portrayal of life, struggles, and the resilient spirit of individuals living close to nature.

₹60

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLife, Nature
  • PlacesRural Tamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodContemplative
நாசுக்கான எதார்த்தவாத கதைகளிலும், கனவும் அழகியலும் கற்பனையும் கலந்த இலக்கிய எழுத்தாலும் சஞ்சரித்து கிடந்தவனை முதன் முதலில் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது ஜி.நாகராஜனின் எழுத்துக்கள். அதன் பின் கோபி கிருஷ்ணனின் கதை சொல்லும், தஞ்சை பிரகாஷின் படைப்புகளும் என் தூக்கத்தை கலைத்து போட்டிருக்கிறது. அப்படியான கவுச்சியான எழுத்தை நுகர்ந்து வெகுகாலமாகிவிட்டது. அற்கான வெற்றிடம் அப்படியே கிடந்தது. அப்போதுதான் சுருங்கிப்போன குடல் ஒன்று பந்துபோல கீழே விழுந்தது. டரிக்கியோட கொடலு சகாயம். எப்டி சுருங்கிபோயிருக்குது பாரு என்கிற திருப்பாலின் குரல் கேட்டது. தொடர்ந்த பாக்கியம் சங்கரின் அந்த குரல், குரலற்றவர்களின் குரலாய் நான்காம் சுவரில் பட்டு எதிரொலித்தது. படித்து முடித்து தூக்கம் கலைந்து வெகுகாலம் கழித்து சிரிப்பினூடே அழுகையை உணர்ந்த அந்தத் தருணத்தில் பாக்கியம் சங்கரிடம் கேட்க தோன்றியது. டேய் சிநேதா ஒரு குவாட்டரு வாங்கினு, அப்டியே சைடிசுக்கு சேட்டு வயித்தில வச்சு தச்சுவிட சேட்டம்மா வாங்கி வந்துச்சுல்ல, அந்த பாசந்தியை எடுத்துகினு வா. இயக்குநர் ராஜி சரவணன் பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்டிசிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். நான் வடசென்னைக்காரன் என்ற நூலின் வழியே சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட பாக்கியம் சங்கர், இந்த நூலின் வழியே நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார். எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன்